Advertisement

👇கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை நிரப்பவும்👇
>>

TNPSC Group 2, 2A Vacancies increase to 5860

TNPSC குரூப் 2, 2ஏ காலிப் பணியிடங்கள் 5860 ஆக அதிகரிப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2, 2A தேர்வுக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 5860 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வுகள் நடத்தி நிரப்பி வருகிறது. அந்த வகையில் இரண்டாம் நிலையில் உள்ள 5,529 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலைத் தேர்வு, கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி நடைபெற்றது. சுமார் 9 லட்சம் தேர்வர்கள் தேர்வை எழுதினர். மொத்தம் 116 நேர்காணல் கொண்ட பதவிகளுக்கும், நேர்காணல் இல்லாத 5,413 பதவிகளுக்கும் தேர்வு நடைபெற்றது.

இதற்கான தேர்வு முடிவுகள், பெண்கள் இடஒதுக்கீடு உள்ளிட்ட காரணங்களால் நீண்ட காத்திருப்புக்குப் பிறகு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்டன. இந்த முதல்நிலைத் தேர்வில் 57,641 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கான முதன்மைத் தேர்வு கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி நடைபெற்றது.

ஆனால், இந்த முதன்மைத் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. தேர்வாணையம் குரூப் 2 தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என்று அறிவித்து இருந்தது. தற்போது குரூப் 2 தேர்வு முடிவுகள் ஜனவரி 12 ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 2, 2ஏ காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையை 5,240 ஆக திருத்தி இருந்தது. இந்நிலையில், இந்த எண்ணிக்கையுடன் புதிதாக 620 காலிப் பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால், குரூப் 2, 2ஏ காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை 5,860 ஆக அதிகரித்துள்ளது. இதனால் தேர்வு எழுதியவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதிகரிக்கப்பட்ட காலியிடங்களின் எண்ணிக்கை மற்றும் எந்தெந்த துறைகளில் எவ்வளவு அதிகரிக்கப்பட்டுள்ளது என்பதை https://www.tnpsc.gov.in/Document/English/ADDENDUM%20_03D_2022.pdf என்ற இணையதளப் பக்கத்தில் தெரிந்துக் கொள்ளலாம்.

 

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Passing 8th standard is enough.. No Exam!

8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.. நோ எக்ஸாம்! ரூ.34,000 சம்பளம்.. ஹெல்த் சொசைட்டியில் செம வேலை

கரூர்: கரூர் மாவட்ட ஹெல்த் சொசைட்டியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான கல்வித்தகுதி என்ன, பணியிடங்கள் எத்தனை என்பன போன்ற விவரங்களை இங்கே பார்க்கலாம்.

கரூர் மாவட்ட ஹெல்த் சொசைட்டியில் காலியாக உள்ள ஏ.என்.எம், லேப் டெக்னிஷியன், சித்தா மருத்துவ பணியாளர் உள்ளிட்ட 23 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலிப்பணியிடங்கள்: ஏ.என்.எம் (02 பணியிடங்கள்) லேப் டெக்னிஷியன் (02), மருத்துவ பணியாளர் 01, எஸ்.பி.எச்.ஐ டிடிபி (01), சித்தா மருத்துவ பணியாளர் (04), ஆயுர்வேத மெடிக்கல் ஆஃபிசர் (01), புரோகிராம் கம் அட்மினிஸ்ட்ரேட்டிவ் அஸ்சிஸ்டண்ட் (01), டெண்டல் சர்ஜன் (02), டெண்டல் அசிஸ்ஸ்டன் (02), எம்.எம்.யூ கிளீனர் (01), மல்டி பர்ப்போஸ் சுகாதார பணியாளர் (ஆண் -04) MLHP (02) என மொத்தம் 23 பணியிடங்கள் நிரப்பபடுகின்றன.

கல்வி தகுதி: கல்வி தகுதியை பொறுத்தவரை ANM பணிக்கு அரசு அங்கீகாரம் மற்றும் இந்தியன் நர்சிங் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட ஏ.என்.எம் பள்ளியில் வழங்கப்பட்ட சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் கல்வி தகுதி குறித்த முழுமையான விவரங்களை தேர்வு அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

லேப் டெக்னிஷியன் பணிக்கு MLT பிரிவில் டிப்ளமோ முடித்து இருக்க வேண்டும். மருத்துவ பணியாளர் பணிக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். SBHI டேடா எண்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு ஏதாவது ஒரு டிகிரியுடன் டைப் ரைட்டிங் தமிழ் & ஆங்கிலத்தில் முதுகலை டிப்ளமோ முடித்து இருக்க வேண்டும்.

வயது வரம்பு: ஏஎன்எம் பணியிடம் முதல் லேப் டெக்னீசியன் என அனைத்து பணியிடங்களுக்கும் வயது வரம்பானது 20 வயதுக்கு குறையாமலும் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.

சம்பளம் எவ்வளவு: ஏஎன்எம் பணியிடத்திற்கு மாத சம்பளம் ரூ. 14,000 ஆகும். இதேபோல் லேப் டெக்னீசியன் பணிக்கு மாத சம்பளம் ரூ.13,000 ஆகும். மருத்துவமனை பணியாளர் பணிக்கு மாதம் ரூ. 8,500 சம்பளம் வழங்கப்படும். ஆயுர்வேத மெடிக்கல் ஆபிசர் பணிக்கு மாதம் ரூ.34,000 சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 23.12.2023 முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 06.01.2024 ஆகும்.

தேர்வு முறை & எப்படி விண்ணப்பிப்பது?: விண்ணப்பதாரர்கள் ஆப்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பங்களை கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும். தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்முகத்தேர்வு அடிப்படையில் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

நிர்வாக செயலாளர்/ துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள்,
மாவட்ட நல வாழ்வு சங்கம், (District Health Society)
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
கரூர் மாவட்டம், கரூர் - 639007.

தேர்வு குறித்த மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை karur.nic.inகிளிக் செய்யவும்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Job at Airport.. Salary up to Rs.1.10 Lakh.. Have you completed degree.. Sema Chance!!

ஏர்போர்ட்டில் வேலை.. ரூ.1.10 லட்சம் வரை சம்பளம்.. டிகிரி முடிச்சிருக்கீங்களா.. செம சான்ஸ்!!

இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலியாக உள்ள 119 ஜூனியர் அசிஸ்டண்ட் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.

ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா (AAI) என அழைக்கப்படும் இந்திய விமான நிலைய ஆணையம், மத்திய விமான போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. விமான நிலையங்களின் நிர்வாகம் உள்ளிட்ட பணிகளை இந்த ஆணையம் தான் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில்தான் விமான நிலைய ஆணையங்களில் காலியாக உள்ள 119 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்:

ஜூனியர் அஸ்சிஸ்டண்ட் (Fire Service)-73 பணியிடங்கள்

ஜூனியர் அஸ்சிஸ்டண்ட் (Office) -25

ஜூனியர் அஸ்சிஸ்டண்ட் (Electronics)-25

ஜூனியர் அஸ்சிஸ்டண்ட் (Accounts)-19

ஆகிய 119 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறதூ.

 

கல்வி தகுதி: ஜூனியர் அஸ்சிஸ்டண்ட் (Office) பணியிடத்திற்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்து இருந்தால் போதும். அக்கவுண்ட்ஸ் பணிக்கு பி.காம் பட்டப்படிப்பு முடித்து இருக்க வேண்டும். Fire Service பணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் டிப்ளமோ இன் மெக்கானிக்கல்/ஆட்டோ மொபைல்/ Fire ஆகியவை முடித்து இருக்க வேண்டும். அல்லது 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் அவசியம். கல்வி தகுதி குறித்த தெளிவான விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வு அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.

18 வயது முதல் 30 வயதுடையோர் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. எஸ்.சி எஸ்.டி பிரிவினருக்கு ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு உண்டு. சம்பளத்தை பொறுத்தவரை 31 ஆயிரம் முதல் 1.10 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். பணியிடங்களுக்கு ஏற்ப மாறுபடும்.

 

விண்ணப்பிப்பது எப்படி?: ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். வரும் 27.12.2023 அன்று முதல் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 26.01.2024 ஆகும்.

 

தேர்வு முறை: தேர்வு முறையை பொறுத்தவரை எழுத்துத்தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் அடுத்த கட்டத்திற்கு தேர்வு செய்யப்படுவார்கள். கணிணி வழியில் தேர்வு நடைபெறும். தேர்வு மையங்களை பொறுத்தவரை சென்னை, மதுரை, பெல்காம், பெங்களூர், கலிகட், கொச்சின், ஐதராபாத், விஜயவாடா ஆகிய நகரங்களில் நடைபெறும்.

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு,ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, லட்சத்தீவுகள் ஆகிய இடங்களில் பணியமர்த்தப்படுவார்கள். தேர்வு அறிவிப்பை தெரிந்து கொள்ள https://www.aai.aero/en/recruitment/release/396317 இங்கே கிளிக் செய்யவும்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

TNPSC next year exam schedule will be released soon

டிஎன்பிஎஸ்சி அடுத்த ஆண்டுக்கான தேர்வு அட்டவணை விரைவில் வெளியீடு

சென்னை: டிஎன்பிஎஸ்சி அடுத்த ஆண்டுக்கான தேர்வுத் திட்ட அட்டவணை விரைவில் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது. ஆண்டு திட்ட அட்டவணை ஒவ்வொரு ஆண்டும் டிஎன்பிஎஸ்சியால் எந்தெந்த மாதத்தில் எந்தெந்த தேர்வுகள் நடத்தப்படும், எவ்வளவு பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படும் என்பதற்கான ஒரு தோராயமான பட்டியலை ஆன்வல் பிளானர் என்ற பெயரில் ஆண்டு திட்ட அட்டவணையாக வெளியிடும்.

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 15ம் தேதி அல்லது அதற்கு முன்னதாக அதனை வெளியிட்டிருக்க வேண்டும் என்பது டிஎன்பிஎஸ்சிக்கு உள்ளேயே பிறப்பிக்கப்பட்ட உத்தரவு. அதன்படி 15ம் தேதிக்கு முன்னதாக டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது சார்ந்த விளக்கம் எதுவும் கொடுக்கப்படாமல் இருந்தது. தற்போது வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில், டிஎன்பிஎஸ்சி ஆண்டு தேர்வுத் திட்ட அட்டவணை விரைவில் இணையதளத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எப்போது அட்டவணை வெளியாகும் என தேர்வர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

 

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Job at Rs.21,000/- Salary – Diploma / Degree is enough!

ரூ.21,000/- ஊதியத்தில் வேலை – Diploma / Degree தேர்ச்சி போதும்!

காஞ்சிபுர மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் ரூ.21,000/- ஊதியத்தில் வேலை – Diploma / Degree தேர்ச்சி போதும்!

காஞ்சிபுர மாவட்ட நலவாழ்வு சங்கம் (Kanchipuram DHS) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் HMIS IT Coordinator, MLHP, Multipurpose Health Worker / Health Inspector Grade II போன்ற பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 26.12.2023 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

 

மாவட்ட நலவாழ்வு சங்க காலிப்பணியிடங்கள்:

காஞ்சிபுர மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் (Kanchipuram DHS) பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • HMIS IT Coordinator – 01 பணியிடம்
  • District Programme cum Administrative Assistant – 01 பணியிடம்
  • MLHP – 03 பணியிடங்கள்
  • Multipurpose Health Worker / Health Inspector Grade II – 03 பணியிடங்கள்
  • Radiographer – 02 பணியிடங்கள்
  • Lab Technician – 03 பணியிடங்கள்
  • Hospital Worker – 01 பணியிடம்
  • Sanitary Worker – 01 பணியிடம்
  • Multipurpose Hospital Worker – 01 பணியிடம்

DHS பணிகளுக்கான கல்வி தகுதி:

இந்த தமிழக அரசு சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி வாரியங்களில் பின்வரும் கல்வித் தகுதியைப் பெற்றவராக இருக்க வேண்டும்.

  • HMIS IT Coordinator – Diploma, B.Sc, BCA
  • District Programme cum Administrative Assistant – Graduate Degree
  • MLHP – GNM, B.Sc
  • Multipurpose Health Worker / Health Inspector Grade II – 12ம் வகுப்பு
  • Radiographer – B.Sc (Radiography)
  • Lab Technician – 12ம் வகுப்பு
  • Hospital Worker / Sanitary Worker / Multipurpose Hospital Worker – தமிழில் எழுத படிக்க தெரிந்தால் போதும்

DHS பணிகளுக்கான வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.

DHS ஊதியம்:

இந்த Kanchipuram DHS சார்ந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் ரூ.8,500/- முதல் ரூ.21,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

 

DHS தேர்வு முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

DHS விண்ணப்பிக்கும் முறை:

இந்த தமிழக அரசு சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு (26.12.2023) அன்றுக்குள் தபால் செய்ய வேண்டும்.

 

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Job in Central Govt.

மத்திய அரசு நிறுவனத்தில் வேலை!!

சென்னை: மத்திய அரசின் ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா (SAIL) பொதுத்துறை நிறுவனத்தில் காலியாக உள்ள 92 மேனேஜ்மண்ட் டிரெய்னி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மத்திய அரசின் பொதுத்தூறை நிறுவனங்களில் ஒன்றான ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள மேனேஜ்மண்ட் டிரெய்னி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தேவையான கல்வி தகுதி, வயது வரம்பு, சம்பளம் உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.

கெமிக்கல் என்ஜினியரிங் (03 பணியிடங்கள்), சிவில் என்ஜினியரிங் (03), எலக்ட்ரிக்கல் என்ஜிரியங்(03), இன்ஸ்ட்ருமெண்டல் என்ஜினியரிங் (26) , மெக்கானிக்கல் என் ஜினியரிங் (34), Metallurgy என் ஜினியரிங் (05), மைனிங் என் ஜினியரிங்( 14) என மொத்தம் 92 பணியிடங்கள் நிரப்பபடுகின்றன.

 

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இருந்து என்ஜினியரிங் படிப்பு முடித்து இருக்க வேண்டும். 60 சதவீத மதிப்பெண்களுடன் துறை சார்ந்த பிரிவில் என் ஜினியரிங் படிப்பு முடித்து இருப்பது அவசியம். கல்வி தகுதி பற்றிய விரிவான விவரங்களை கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் தேர்வு அறிவிப்பில் பார்த்துக் கொள்ளலாம்.

வயது வரம்பை பொறுத்தவரை எஸ்.சி/ எஸ்.டி பிரிவினர் 33 வயது வரை விண்ணப்பிக்கலாம். ஒபிசி பிரிவினர் 31 வயது வரை விண்னப்பிக்கலாம். மாற்றுத்திறனாளிகளுக்கு 10- ஆண்டுகள் வரை வயது வரம்பில் சலுகை உண்டு. துறையில் பணியற்றும் விண்ணப்பதாரர்களுக்கு 45 வயது வரை விண்ணபிக்க அனுமதி உண்டு.

 

தேர்வு முறை: தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ஆன்லைன் முறையில் தேர்வு நடைபெறும். அதில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்களுக்கு குரூப் டிஸ்கசன் நடைபெறும். பின்னர் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ஒரு ஆண்டுக்கு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி காலம் முடிந்த பிறகு ஒரு வருடம் தகுதிகான் காலம் (probation) காலம் ஆகும்.

பயிற்சி காலத்தில் மாதம் ரூ.50 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படும். மேனேஜ்மெண்ட் டிரெய்னி பணிக்கு சேர்ந்த பின்னர் 50,000-1,80,000- வரை சம்பளமாக வழங்கப்படும்.

 

தேர்வு நடைபெறும் இடங்கள்: ஜனவரி மாதத்தில் ஆன்லைன் தேர்வு நடைபெறும் என உத்தேசமாக கூறப்பட்டுள்ளது. நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் கணிணி வழி தேர்வு நடைபெறும். தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி சேலம், ஆகிய நகரங்களில் நடைபெறும்.

 

விண்ணப்ப கட்டணம்: விண்ணப்ப கட்டணமாக ஒபிசி பிரிவினர் ரூ.700 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி உள்ளிட்ட பிரிவினருக்கு ரூ.200 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 31.12.2023க்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு அறிவிப்பை படிக்க https://d1cmkr5tdoeyjk.cloudfront.net/sail/pdf/Detailed%20Advt.-SRD.pdf என்ற இணையதள லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Salary Rs.45,000.. From Teacher to Assistant!!

ரூ.45,000 சம்பளம்.. ஆசிரியர் முதல் உதவியாளர் வரை!!

திருப்பூர் அமராவதி நகரில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் சைனிக் பள்ளியில் ஆசிரியர், ஆய்வக உதவியாளர் உள்பட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. 12ம் வகுப்பு முடித்தவர்கள் முதல் பிஎப்ட படித்தவர்கள் இதற்கு விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.22 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் என பணியை பொறுத்து சம்பளம் வழங்கப்பட உள்ளது.

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் சார்பில் இந்தியாவில் பல இடங்களில் சைனிக் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம் அமராவதிநகரில் உள்ள சைனிக் பள்ளியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. இந்த பணிகள் குறித்த விபரங்கள் வருமாறு:

இந்த பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார். இந்த பணியை விரும்புவோர் இயற்பியல் துறையில் எம்எஸ்சி மற்றும் பிஎட் முடித்திருக்க வேண்டும். மாதம் ரூ.45 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படும். விண்ணப்பத்தாரர்கள் 21 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

 

கணித ஆசிரியர்: இந்த பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார். இந்த பணிக்கு கணிதத்தில் பிஎஸ்சி-பிஎட் படித்திருக்க வேண்டும். மாதம் ரூ.40 ஆயிரம் சம்பளமாக கிடைக்கும். பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 21 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

இந்த பணிக்கும் ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார். இதற்கு ஆங்கிலத்தில் பிஏ , பிஎட் முடித்திருக்க வேண்டும். மாதம் ரூ.40 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பம் செய்வோர் 21 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

 

ஆய்வக உதவியாளர்: இயற்பியல் ஆய்வகத்துக்கான உதவியாளர் பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார். இந்த பணிக்கு 12ம் வகுப்பில் இயற்பியலை ஒரு பாடமாக படித்து முடித்திருக்க வேண்டும். மாதம் ரூ.25 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படும். விண்ணப்பத்தாரர்கள் 18 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

இந்த பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார். பச்மார்ஹி ஏஇசி பயிற்சி கல்லூரியில் பேண்ட் மாஸ்டர், பேண்ட் மேஜர், டிரம் மேஜர் படிப்பு அல்லது அதற்கு நிகரான கடற்படை, விமானப்படை படிப்புகளை முடித்திருக்க வேண்டும். மாதம் ரூ.28 ஆயிரம் சம்பளமாக கிடைக்கும். பணியை பெற விரும்பும் விண்ணப்பத்தாரர்கள் 21 வயது முதல் 50 வயதுக்குள் இருக்க வேண்டும்.

 

Counselor: இந்த பணிக்கும் ஒருவர் மட்டுமே தேர்வு செய்யப்பட உள்ளார். முதுகலை பிரிவில் சைக்கலாஜி, கிளினீக்கல் சைக்கலாஜி அல்லது சைல்ட் டெவலப்மென்ட் இல்லாவிட்டால் டிப்ளமோவில் கேரியர் கைடென்ஸ் அன்ட் கவுன்சிலிங் படிப்பை முடித்திருக்க வேண்டும். மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளமாக கிடைக்கும். விண்ணப்பம் செய்வோர் 21 வயது முதல் 50 வயதுக்குள் இருக்க வேண்டும்.

பிஇஎம்/பிடிஐ -கம் மேட்ரான் (பெண்): PEM/PTI-cum-matron (Female) பணிக்கும் ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார். இதற்கு இடைநிலை படிப்பை முடித்து ஆங்கிலத்தில் நல்ல புலமை பெற்றிருக்க வேண்டும். மாதம் ரூ.22 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பத்தாரர்கள் 21 வயது முதல் 50 வயதுக்குள் இருக்க வேண்டும்.

 

விண்ணப்பிப்பது எப்படி: மேலும் இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோரில் அரசு விதிகளின்படி வயது தளர்வு என்பது வழங்கப்படும்.

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் http://www.sainikschoolamaravahinagar.edu.in எனும் இணையதளத்தில் விண்ணப்பம் டவுன்லோட் செய்து பூர்த்தியிட்டு உரிய ஆவணங்களின் நகல்களை இணைத்து ‛‛Principal, Sainik School, Amaravathinagar, Pin - 642 102, Udumalpet Taluk, Tiruppur District என்ற முகவரிக்கு டிசம்பர் 26ம் தேதிக்குள் கிடைக்கும்படி அனுப்பி வைக்க வேண்டும்

தேர்வு செய்வது எப்படி: விண்ணப்ப கட்டணமாக ரூ.300 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி பிரிவினர் என்றால் ரூ.200 செலுத்த வேண்டும். விண்ணப்ப கட்டணத்தை செலுத்துவது கீழே உள்ள அதிகாரப்பூர்வ இணைப்பில் விரிவாக கூறப்பட்டுள்ளது. இப்படி பணிக்கு விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு, திறனறி தேர்வு, நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

37,000/- Central Government Jobs per month – Apply and Buy!!

மாதம் ரூ.37,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

மாதம் ரூ.37,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Technical Associate பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை இந்திய வன ஆய்வு நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது. இந்த அறிவிப்பின் படி, மொத்தம் 25 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே தங்களின் பதிவுகளை 04.12.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 

FSI காலிப்பணியிடங்கள்:

இந்திய வன ஆய்வு நிறுவனத்தில் Technical Associate பதவிக்கு என மொத்தம் 25 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து MCA/ M.Sc./ B.Tech/ Diploma/ M.Tech/ PG Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Associate வயது வரம்பு:

20.1.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

FSI சம்பள விவரம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.37,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

 

தேர்வு செயல் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் Written Test, Hands-on Test, Interview ஆகிய தேர்வு செயல் முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர் .

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் https://fsi.nic.in/recruitments.php என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு வரும் 04.12.2023க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Employment for 1.80 lakh people in Tamil Nadu - Minister S.Muthusamy informed

தமிழகத்தில் 1.80 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - அமைச்சா் சு.முத்துசாமி தகவல்

கோவையில் நடைபெற்ற தனியாா் வேலை வாய்ப்பு முகாமில் தேர்வு  செய்யப்பட்டவா்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய அமைச்சா் சு.முத்துசாமி. உடன், மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி உள்ளிட்டோா்.

முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, தமிழகத்தில் நடைபெற்றுள்ள 81 தனியாா் வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 1 லட்சத்து 80 ஆயிரத்து 45 போ் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனா் என்று வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.

கோவை நிா்மலா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாமில் 4 மாற்றுத் திறனாளிகள் உள்பட 39 பேருக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சா் சு.முத்துசாமி வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து, அமைச்சா் சு.முத்துசாமி பேசியதாவது: மாவட்டத்தில் தற்போது நடைபெற்ற மூன்றாவது வேலை வாய்ப்பு முகாமில் 5,587 போ் பதிவு செய்தனா். 128 நிறுவனங்கள் கலந்துகொண்டு, காலிப் பணியிடங்களுக்கு ஆள்களைத் தோ்வு செய்துள்ளன. முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, தமிழகம் முழுவதும் 100 தனியாா் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு, இதுவரை 81 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் 2 லட்சத்து 88 ஆயிரத்து 303 போ் கலந்துகொண்டனா். அதில், 1 லட்சத்து 80 ஆயிரத்து 45 போ் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனா் என்றாா்.

முன்னதாக, கோவை ஆா்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் நடைபெற்ற முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் பயனாளிகள் பதிவு செய்யும் சிறப்பு முகாமில் பயனாளிகளுக்கு காப்பீட்டு அடையாள அட்டைகளை அமைச்சா் வழங்கினாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் ஏற்கெனவே 6 லட்சத்து 39 ஆயிரத்து 602 குடும்பங்கள் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டைகளைப் பெற்றுள்ளன. மேலும், 5 லட்சம் குடும்பங்களுக்கு காப்பீட்டு அட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். 52 பொது மருத்துவ சிகிச்சையும், 6 விதமான அறுவை சிகிச்சைகளும் செய்து கொள்ள முடியும்.

அமலாக்கத் துறை விவகாரத்தில் யாராக இருந்தாலும் சட்டம் தன் கடமையைச் செய்யும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி, பொள்ளாச்சி மக்களவை உறுப்பினா் கு.சண்முகசுந்தரம், மாநகராட்சி மேயா் கல்பனா, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
 

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
FIRST | PREV   ( Page 1 of 27 )   NEXT |  LAST